IND vs AUS : கடைசி போட்டியில் தோற்றால் இந்திய இழக்கப்போவது தொடரை மட்டுமல்ல – இன்னொரு விஷயமும் இருக்கு

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று (1-1) என்ற கணக்கில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND-vs-AUS-1

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி தோற்றால் தோற்கப்போவது ஒருநாள் தொடரை மட்டுமல்லாது மற்றொரு விஷயமும் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது ஐசிசி-யின் ஒருநாள் அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியானது 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதோடு சேர்த்து ஒருநாள் அணிகளின் தரவரிசை பட்டியலின் முதலிடத்தையும் இழக்கும்.

Virat Kohli

எனவே தற்போது 114 புள்ளிகளில் இருக்கும் இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்வதோடு மட்டுமின்றி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் நீடிக்கும். அதேவேளையில் தோல்வியை சந்தித்தால் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றுவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

எனவே இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தற்போது பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் ஆஸ்திரேலிய அணியானது இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 117 ரன்களுக்கு சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் கடைசி போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

இதையும் படிங்க : IND vs AUS : 3வது போட்டியில் ஜெய்க்க அவருக்கு பதிலா சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்தா என்ன தப்பு? வாசிம் ஜாபர் கோரிக்கை

ஆனாலும் இரண்டாவது போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணியும் பலமாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement