IND vs AUS : 3வது போட்டியில் ஜெய்க்க அவருக்கு பதிலா சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கொடுத்தா என்ன தப்பு? வாசிம் ஜாபர் கோரிக்கை

Sanju Samson Wasim Jaffer
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி 117 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. இந்த தொடரின் 2 போட்டிகளிலுமே இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்ட நிலையில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் 2 போட்டிகளிலும் மிட்சேல் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இத்தனைக்கும் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி பவுலர்களை சரவெடியாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ள அவர் ஆரம்பம் முதலே தடிமாறி வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 25.47 என்ற சுமாரான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

சஞ்சு சாம்சன்:
மேலும் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டு வருவதால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சூரியகுமார் சரிப்பட்டு வர மாட்டார் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் சஞ்சு சம்சானுக்கு வாய்ப்பளிக்குமாறு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் 2015 முதலே நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வரும் அவர் கடந்த 2022இல் பெற்ற வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

ஆனாலும் அந்தத் தொடருக்குப்பின் மொத்தமாக கழற்றி விடப்பட்டு இத்தொடரில் பெஞ்சில் அமர்ந்து வரும் அவருக்கு சூரியகுமார் யாதவுக்கு பதிலாக சென்னையில் நடைபெறும் 3வது போட்டியில் விளையாட வாய்ப்பளிக்குமாறு முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “145 கி.மீ வேகத்தில் 2 போட்டிகளிலும் முதல் பந்தை எதிர்கொண்டதால் சூரியகுமார் யாதவ் மீது நாம் பரிதாபப் படலாம். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பந்தை உள்ளே கொண்டு வர முயற்சித்ததால் அது மிகவும் சவாலாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“ஆனால் மிட்சேல் ஸ்டார்க் பந்தை ஸ்விங் செய்து ஸ்டம்ப்களை தாக்குவார் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். எனவே தற்போதைய நிலைமையில் 3வது போட்டியில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒருவேளை இல்லை என்றால் அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கு தகுதியானவர். ஏனெனில் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் சிறந்த வீரர்”

“மேலும் 2வது போட்டியில் நமது பேட்டிங்கை பார்த்தது ஏமாற்றமத்தை கொடுத்தது. சொல்லப்போனால் முதல் போட்டியிலேயே கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்தியாவை காப்பாற்றினார்கள். 2வது போட்டியில் ராகுல் எதிர்கொண்ட அதிவேகமான பந்தை எதிர்கொள்வது அனைவருக்குமே கடினமாகும் ஆனால் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானார்கள்”

இதையும் படிங்க:IPL 2023 : கையில் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சி.எஸ்.கே – அப்படி என்ன ஸ்பெஷல்

“சூரியகுமாரும் ஒரு நல்ல பந்தில் தான் அவுட்டானார். அதை தவிர்த்து இந்தியாவின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. குறிப்பாக விராட் கோலி நன்கு செட்டிலாகியும் நேராக வந்த பந்தை தவற விட்டார். மொத்தத்தில் ராகுல் தவிர்த்து வேறு யாருமே அற்புதமான பந்தில் அவுட்டாகவில்லை. எனவே அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்” என்று கூறினார்.

Advertisement