IPL 2023 : கையில் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்த சி.எஸ்.கே – அப்படி என்ன ஸ்பெஷல்

Magala
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரின் இந்த ஆண்டுக்கான 16-வது சீசன் இன்னும் பத்து தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு சில அணிகளை சேர்ந்த வீரர்கள் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.

Jamieson

- Advertisement -

அந்தவகையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணி ஒரு கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலையில் வாங்கியிருந்த கைல் ஜேமிஸன் தற்போது காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கான மாற்றுவீரரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது.

அதன்படி ஜேமிசனுக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளரான சிசாண்டா மஹாலாவை மாற்று வீரராக அணியில் தேர்வு செய்துள்ளது. 32 வயதான தென்னாப்பிரிக்க வீரர் சிசாண்டா மஹாலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு மாற்றுவீரராக தேர்ந்தெடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தின் போது விற்கப்படாமல் போன இவரை மீண்டும் அணியில் சிஎஸ்கே வாங்க என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Magala 1

அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மஹாலா அறிமுகமாகி இருந்தாலும் அண்மையில் முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 லீக்கில் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடியிருந்த அவர் அந்த தொடரில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி டி20 போட்டிகளில் இறுதி கட்ட ஓவர்களை மிகச் சிறப்பாக வீசுவதில் வல்லவரான மஹாலா தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரிலும் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதோடு பவர்பிளே ஓவர்களிலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியும் என்பதாலும் பின் வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்யும் திறனும் இருப்பதினால் சிஎஸ்கே அணி அவரை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இந்த வருஷம் நடக்கப்போகும் உலககோப்பையை ஜெயிக்கப்போவது இந்த அணிதான் – பிரெட் லீ கணிப்பு

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத்தில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement