
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் கொழும்பு நகருக்கு சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் நிகழலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக தவறவிட்ட துவக்க வீரரான அபிஷேக் சர்மா இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே அவர் பேட்டிங் பயிற்சியை துவங்கி விட்டதால் நிச்சயம் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அதன் காரணமாக கடந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ
அதேபோன்று மற்றொரு மாற்றமாக கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து வேறு ஏதும் பெரிய மாற்றங்கள் நிகழாது என்று கூறப்படுகிறது.