இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – விவரம் இதோ

Colombo
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி-யின் மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 9 உலக கோப்பைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள வேளையில் தற்போது பத்தாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் :

மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்த மார்ச் 8-ஆம் தேதி வரை உலக கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான போட்டிகள் இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களது முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளை எதிர்த்து வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியான பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.

அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த 27-வது லீக் ஆட்டம் நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : போட்டி நடைபெற இருக்கும் கொழும்பு நகரில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கை வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆடனும் – சுனில் கவாஸ்கர் சொன்ன காரணம்

இதன் காரணமாக போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இதற்கு ரிசர்வ் நாள் எல்லாம் கிடையாது. லீக் சுற்று போட்டிகள் என்பதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement