சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தங்களது முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆடனும் : சுனில் கவாஸ்கர்
அந்தவகையில் பிப்ரவரி 15-ஆம் தேதியான நாளை கொழும்பு நகரில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எப்பொழுதுமே உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இம்முறையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை கழற்றிவிட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கொழும்பு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நிர்வாகம் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக போதும். ஒருவேளை தேவைப்பட்டால் ஷிவம் துபேவையும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுதான்னு நினைக்குறேன் – ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி
அதை தவிர்த்து வாஷிங்டன் சுந்தருடன் சேர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் அணிக்கு நல்லது. அதுமட்டும் இன்றி வாஷிங்டன் சுந்தரால் கூடுதலாக எட்டாம் இடத்தில் களமிறங்கி பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதனால் அது நமக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் எனவே நாளைய போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



