இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக நமீபியா அணிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
சஞ்சு சாம்சன் தடுமாற இதுவே காரணம் : ரவிச்சந்திரன் அஷ்வின்
அப்படி தனது இடத்தை இழந்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் அபிஷேக் சர்மாவிற்கு பதிலாக ஒரு வாய்ப்பு கிடைத்த வேளையில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியிலும் 8 பந்துகளை சந்தித்த அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரது இந்த சொதப்பலான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் அவருடைய எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் செய்யும் தவறு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது : சஞ்சு சம்சனை பார்க்கும்போது தற்போது ரன்களை தேடி அவர் அலைகிறார் என்பது போல தெரிகிறது.
அவர் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. பல விஷயங்களை நினைத்து அவர் ரன்னை நோக்கி ஓடுகிறார். அவரது மனதில் தெளிவு இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதன் காரணமாகவே அவர் விரைவாக ரன் குவிக்க நினைத்து ஆட்டமிழந்து வெளியேறுகிறார். ஒரு பேட்ஸ்மேனிடம் தெளிவில்லாமல் இருக்கும் போது இப்படி தான் விக்கெட்டுகள் விழும்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் அவரை விளையாட வையுங்க – மொயின் அலி பேட்டி
எந்த ஒரு பெரிய வீரரும் மனநிலை சரியாக இருந்தால் மட்டுமே சிறப்பாக விளையாட முடியும். சஞ்சு சாம்சனுக்கு தற்போது அழுத்தம் அதிகமாக இருப்பதை நினைத்து அவர் இப்படி ஆட்டமிழந்து வெளியேறுகிறார். என்னை பொறுத்தவரை பயமில்லாமல் அவர் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



