பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் அவரை விளையாட வையுங்க – மொயின் அலி பேட்டி

Moeen Ali
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15-ஆம் தேதி நாளை கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையேயான இந்த மோதல் எப்போதும் போலவே இம்முறையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் அவரை சேருங்க : மொயின் அலி விருப்பம்

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் வாரியம் தெரிவித்திருந்த வேளையில் மீண்டும் ஐசிசி நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்திய அணியுடன் விளையாட சம்மதித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த விவாதங்களும் பலரது மத்தியிலும் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி கொழும்பு நகரில் நடைபெற இருப்பதால் இந்திய அணி கூடுதலாக குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : குல்தீப் யாதவ் விளையாடினால் நிச்சயம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். பாபர் அசாமிற்கு எதிராக சிறந்த சாதனையை வைத்துள்ள அவர் இந்த ஆடுகளத்தில் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தினை சேர்ப்பார்.

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய அவர் பிரேமதாசா மைதானத்தின் தன்மையையும் சரியாக கணித்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆனாலும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : திடீரென இலங்கைக்கு பறந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ

ஏனெனில் ஒருபுறம் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக விளையாடுவதாலும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உலகின் நம்பர் ஒன் பவுலரான வருண் சக்கரவர்த்தி விளையாடுவதாலும் அவர்கள் இருவரையும் நீக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே ஒருவேளை குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டுமெனில் ரிங்கு சிங்கை வெளியில் அனுப்பினால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement