இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்தியா அணியும் தங்களது முதல் இரண்டு ஆட்டங்களை விளையாடி முடித்துள்ளது.
இலங்கை சென்றடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் :
அந்த வகையில் அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அந்த இரண்டு போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ள வேளையில் அடுத்ததாக தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதியான நாளை பாகிஸ்தான் அணியை எதிர்த்து கொழும்பு நகரில் நடைபெறயிருக்கும் போட்டியில் விளையாட இருக்கிறது.
இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டிக்கு முன்னதாக கொழும்பு நகருக்கு வந்தடைந்த இந்திய வீரர்களுடன் புதிதாக ஷ்ரேயாஸ் ஐயரும் இணையவுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் இந்திய அணி வீரர்கள் கொழும்பு வந்தடைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஷ்ரேயாஸ் ஐயரும் அங்கு வந்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணியில் மாற்றம் நிகழக்கூட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அபிஷேக் ஷர்மா ஏற்கனவே உடல் உபாதை காரணமாக அவதிப்பட்டு வரும் வேளையில் இரண்டு கிலோ வரை எடை இழப்பினையும் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? ஐ.சி.சி சொன்னது என்ன? – விவரம் இதோ
இதன் காரணமாக அவர் முழு உடற் தகுதியை எட்ட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. அதனாலே முன்னெச்சரிக்கை காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் கொழும்பு விரைந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.



