நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய ஆட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதியான நாளை கொழும்பு நகரில் நடைபெறயிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டது.
பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்குவார்களா? :
அதேபோன்று பாகிஸ்தான் அணியும் தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் விளையாட மாட்டோம் என ஏற்கனவே பாகிஸ்தான் நிர்வாகம் தெரிவித்திருந்தனர். பின்னர் மீண்டும் விளையாடுவதாக அறிவித்துவிட்டது. அதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் அவர்களுடன் கை குலுக்குவார்களா என்பதே பெரிய கேள்வியாக மாறிவிட்டது.
ஏனெனில் ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க மறுத்துவிட்டனர். அதேபோன்று மோசின் நக்வியிடமிருந்து சூரியகுமார் யாதவும் கோப்பையை பெற்றுக் கொள்ள மறுத்தார். இதன் காரணமாக இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : அழுறதை விட்டு முதல்ல இதை பண்ணுனு ஹார்டிக் பாண்டியா தான் எனக்கு அட்வைஸ் குடுத்தாரு – இஷான் கிஷன் ஓபன்டாக்
இந்நிலையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் முன் வைத்தாலும் ஐசிசி அதை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யலாம் என்பது உறுதியாகி உள்ளது.



