இந்திய அணியின் இளம் இடதுகை ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தனது திறனை நிரூபிக்க புதிய தேர்வாளர்கள் மூலம் மீண்டும் இந்திய டி20 அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.
ஹார்டிக் பாண்டியா வழங்கிய அறிவுரை :
அப்படி அணிக்குள் வந்த இஷான் கிஷன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே தற்போது 2026 டி20 உலககோப்பை தொடரில் முதன்மை துவக்க வீரராக விளையாடி வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் அவருடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையுமே தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
அணியில் இடம் பெறுவாரா? என்று கேள்வி போய் தற்போது முதன்மை துவக்க வீரராகவும் மாறியுள்ளார். நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணிக்கு தேர்வாகாத தனது கடினமான காலம் குறித்தும் அப்போது ஹார்டிக் பாண்டியா கொடுத்த அறிவுரை குறித்தும் சில கருத்துக்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் பொதுவாகவே அமைதியாக இருக்கக்கூடிய நபர் கிடையாது. இந்திய அணிக்கு தேர்வாகாத காலத்தில் அது குறித்து நிறையவே ஹார்டிக் பாண்டியாவிடம் புலம்பி இருக்கிறேன். அப்போது ஹார்டிக் பாண்டியா என்னிடம் : நீ எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு உன்னுடைய விடயத்தில் கவனத்தில் செலுத்து. எப்போதுமே நாம் நம்முடைய உழைப்பை முதலில் வழங்க வேண்டும்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா ஒரு சாதாரண பேட்ஸ்மேன்.. இந்த 2 பந்தை போட்டா அவர் காலி – முகமது ஆமீர் விமர்சனம்
நம்மை யாரும் கவனிக்கவில்லை என்றால் கூடுதலாக கடுமையாக உழைக்க வேண்டும். அது நமக்கு பலன் கொடுக்கும். அழுது கொண்டே இருந்தால் எதுவும் மாறிவிடாது. காலையில் எழுந்து உன்னுடைய இலக்கை நோக்கி கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் அதன் பின்னரே தனது எண்ணங்கள் அனைத்தும் மாறியதாகவும் இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.



