நியூசிலாந்து தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி படைத்துள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. மும்பை மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 375 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 62 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ind 1

- Advertisement -

அதனை தொடர்ந்து 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 176 ரன்களை மட்டுமே குவிக்க தற்போது இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்திய மண்ணில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனையை யாதெனில் இதுவரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

இதையும் படிங்க : அணில் கும்ப்ளேவின் சாதனையே முறியடித்த அஷ்வின். முரளிதரன் ரெக்கார்ட் ஜஸ்ட் மிஸ் – மாஸ் காட்டும் அஷ்வின்

மேலும் விராட் கோலி தலைமையில் 2014ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இந்திய அணியானது 66 போட்டிகளில் 39 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 16 தோல்விகள் மற்றும் 11 டிராவினை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement