அணில் கும்ப்ளேவின் சாதனையே முறியடித்த அஷ்வின். முரளிதரன் ரெக்கார்ட் ஜஸ்ட் மிஸ் – மாஸ் காட்டும் அஷ்வின்

Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 3-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 167 ரன்களை மட்டுமே அடித்ததால் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என 8 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ashwin 1

- Advertisement -

மேலும் முதல் போட்டியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக அமையவே தொடர் நாயகன் விருது அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனை ஒன்றினை ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.

அதன்படி இந்திய மண்ணில் விரைவாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெயரை தற்போது அஷ்வின் கும்ப்ளேவிடமிருந்து தட்டி பறித்துள்ளார். இந்திய மண்ணில் 300 விக்கெட்டுகளை எடுக்க கும்ப்ளே 52 போட்டிகள் எடுத்துக் கொண்டார். ஆனால் அஷ்வின் நாற்பத்தி ஒன்பது போட்டிகளிலேயே இந்திய மண்ணில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

ashwin 3

அதுமட்டுமின்றி இன்னும் ஒரு போட்டி முன்னதாக முடித்திருந்தால் முரளிதரன் சாதனையையும் அஷ்வின் சமன் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். முரளிதரன் இலங்கை மண்ணில் 48 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சொந்த மண்ணில் விரைவாக 300 விக்கெட் வீழ்த்திய சாதனையாக உள்ளது. அதனை ஒரு டெஸ்ட் போட்டி வித்தியாசத்தில் தற்போது அஷ்வின் தவறவிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு வேறு எந்த அணிக்காகவும் விளையாட விருப்பமில்லை. இதுதான் என் விருப்பம் – சுனில் நரேன் பளீர்

இருப்பினும் அடுத்ததாக 350 விக்கெட்டுகளை கடந்து அணில் கும்ப்ளேவின் அதிக விக்கெட்டுகள் சாதனையையும் அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது. கும்ப்ளே அதிகபட்சமாக இந்திய மண்ணில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஷ்வின் தற்போது இந்திய மண்ணில் 300 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் விரைவில் இந்த சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் இந்த தொடரில் பெற்ற தொடர் நாயகன் விருது அவருக்கு 9 ஆவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement