எனக்கு வேறு எந்த அணிக்காகவும் விளையாட விருப்பமில்லை. இதுதான் என் விருப்பம் – சுனில் நரேன் பளீர்

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைந்து 10 அணிகளுடன் இந்த ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள நான்கு பேர்களை மட்டும் தக்க வைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

IPL
IPL Cup

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு மீதமுள்ள வீரர்களை ஏலத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா அணி சார்பாக தக்க வைக்கப்பட்ட வீரர்களில் சுனில் நரைன் 4ஆவது வீரராக தக்க வைக்கப்பட்டார். கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரேன் 6 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டது குறித்து பேசிய சுனில் நரைன் கூறுகையில் :

எனக்கு ஐபிஎல் தொடரில் மற்ற அணிக்காக விளையாட விருப்பம் இல்லை. கொல்கத்தா மட்டுமே என்னுடைய முதல் விருப்பமாக எப்போதுமே இருந்துள்ளது. ஏனெனில் இங்குதான் நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். மேலும் என்னுடைய கம் பேக்கிற்க்கு இடம் கொடுத்ததும் இங்கே தான். நான் கொல்கத்தா அணிக்காக தொடர்ச்சியாக விளையாட கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் என்னுடைய நாட்டை தவிர்த்து கொல்கத்தா அணி என்னுடைய இரண்டாவது வீடாக உள்ளது.

- Advertisement -

narine 1

நிச்சயம் இனிவரும் காலங்களிலும் கொல்கத்தா அணிக்காக நான் விளையாட விரும்புகிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2020 ஆம் ஆண்டு என்னுடைய பௌலிங் ஆக்சனில் தவறு இருக்கிறது என்று கூறினார்கள். அப்போதும்கூட நான் அந்த தவறினை கடின பயிற்சியின் மூலம் சரி செய்து கொண்டு மீண்டும் அணிக்குள் வந்தேன். அப்போதும் என்னை நம்பி கொல்கத்தா அணி வாய்ப்பு அளித்தது.

இதையும் படிங்க : முடிவுக்கு வர இருக்கும் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி – புதிய கேப்டன் யார் தெரியுமா ?

இப்படி என்னுடைய பலவித பரிமானத்திற்கு இடமாக கொல்கத்தா அணியும் விளங்கியுள்ளது. நிச்சயம் இனிமேலும் நான் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக என்னுடைய முழு பங்கினையும் அளிப்பேன் என நரேன் கூறியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணிக்கு பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே முக்கிய வீரராக சுனில் நரேன் இடம்வகிப்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement