முடிவுக்கு வர இருக்கும் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி – புதிய கேப்டன் யார் தெரியுமா ?

Kohli
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததால் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் அவர் தொடர்ந்து நீடிக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படும் என்ற தகவல் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.

Kohli

- Advertisement -

அதன்படி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுடன் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நன்றாக செட்டாகி உள்ளதால் ஒருநாள் அணிக்கும் ரோஹித்தை கேப்டனாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது இந்த மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது பிசிசிஐ நிர்வாகிகள் கோலியை விட ரோஹித் சர்மா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

rohith

அதற்கு இன்னும் ஒரு ஆண்டே அவகாசம் உள்ளதால் இப்போதிலிருந்தே அணியை பலப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வந்தாக வேண்டும் என்பதனால் ரோகித் சர்மாவை ஒருநாளை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி அறிமுகமானதிலிருந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க சற்று அதிகமான போட்டிகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவிடை ஓகே சொல்ல வைக்குறதுக்குள்ள ரொம்ப கஷ்டபட்டுட்டேன் – சவுரவ் கங்குலி பகிர்ந்த சுவாரசியம்

ஆனால் இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என்பதனால் ரோகித் சர்மாவின் நியமனம் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தென்னாபிரிக்கா சொல்லும் இந்திய டெஸ்ட் அணியிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement