டிராவிடை ஓகே சொல்ல வைக்குறதுக்குள்ள ரொம்ப கஷ்டபட்டுட்டேன் – சவுரவ் கங்குலி பகிர்ந்த சுவாரசியம்

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முடிவடைந்த உலக கோப்பை தொடர் உடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிராவிட் தனது பயிற்சியாளர் பொறுப்பினை நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து துவங்கினார். அதனைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்று பிசிசிஐ அறிவித்தது.

dravid

- Advertisement -

மேலும் அவரது விருப்பத்தின் பெயரில் பயிற்சியாளர் பதவியை அவர் தொடரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிடை நியமிக்க தான் படாதபாடு பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நீண்ட நாட்களாகவே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வந்தோம்.

நான் பலமுறை டிராவிட்டை பயிற்சியாளராக வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் நாங்கள் டிராவிட்டை வற்புறுத்துவதை நிறுத்தி விட்டோம். பிறகு மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு நாங்கள் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்குமாறு தொடர்ந்து அவரிடம் வேண்டுகோள் வைத்தோம்.

dravid 2

ஆனால் எப்போதும் எங்களது கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் இந்த பதவியின் போது உங்களுக்கு இருக்கும் கஷ்டம் எனக்கு தெரியும். இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் மட்டும் பயிற்சியாளராக இருங்கள் என்று ஒரு வழியாக பேசி சமாதானப் படுத்தினேன். அதன் பிறகே டிராவிட் பயிற்சியாளராக ஒப்புக் கொண்டார். எப்போது அவர் மனம் மாறியது என்று எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கடந்த 4-5 வருஷத்துல நாம் அடைந்த மோசமான தோல்வி இதுதான் – கோலியின் தலைமையை சாடிய கங்குலி

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கங்குலி அளித்த ஒரு பேட்டியில் டிராவிட்டின் மகன் தனது தந்தைக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து அவரை பணியாற்ற வையுங்கள். வீட்டில் அவர் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார் என்று கூறியதாகவும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement