கடந்த 4-5 வருஷத்துல நாம் அடைந்த மோசமான தோல்வி இதுதான் – கோலியின் தலைமையை சாடிய கங்குலி

Ganguly
Advertisement

பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கங்குலியின் செயல்பாடுகள் அனைத்தும் அதிரடியாக இருந்து வருகிறது. இவரது தலைமையின் கீழ் நிச்சயம் இந்திய அணி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய அணி கடந்த 4-5 ஆண்டுகளில் பெற்ற மோசமான தோல்வி எது என்பது குறித்து தற்போது கங்குலி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையாக கூற வேண்டுமென்றால் 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்திய அணி மிகச் சிறப்பான ஒரு அணியாக இருந்தது.

Ganguly

குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போது நான் வர்ணனையாளராக இருந்தேன். ஆனால் அது கூட என்னை பொறுத்தவரை பெரிய தோல்வி கிடையாது. அதே போன்று 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் கூட தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுவந்த இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து எதிராக தோல்வி அடைந்தது.

- Advertisement -

அதுவும் நமக்கு பெரிய தோல்வி கிடையாது. ஏனெனில் அது போன்ற மிகப்பெரிய தொடரில் ஒரு நாள் நமக்கு மோசமாக அமைந்துவிட்டால் தோல்வி அடைவது சகஜம் தான். ஆனால் கடந்த 4-5 ஆண்டுகளில் மிக மோசமான தோல்வி என்று நான் கருதுவது யாதெனில் : ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது தான் மோசமான தோல்வி என்று நான் கூறுவேன்.

Williamson

ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்த கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியதுதான் என்னை பொறுத்தவரை மோசமான தோல்வி என கங்குலி தனது கருத்தினை கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சின்ன சின்ன மிஸ்டேக்லாம் சரி பண்ணா பெரிய பிளேயரா வருவாரு – இளம்வீரரை பாராட்டிய சச்சின்

கங்குலி கூறியது போலவே நமக்கு இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் தோல்வி என்பது மோசமான ஒன்று தான். ஏனெனில் ஐசிசி தொடர்களில் கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பிறகு நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய ஒரே தொடர் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement