சின்ன சின்ன மிஸ்டேக்லாம் சரி பண்ணா பெரிய பிளேயரா வருவாரு – இளம்வீரரை பாராட்டிய சச்சின்

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் சதம் அடித்த மாயங்க் அகர்வால் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்து உள்ளார். அதே போன்று மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில்லும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

gill

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரரான சுப்மன் கில்லை பாராட்டி சச்சின் டெண்டுல்கர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் நிச்சயம் தனது பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தால் நிச்சயம் அவர் பெரிய பிளேயராக மாறுவார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள் அவர் எந்த மாதிரியான வீரர் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவரால் கடினமான மைதானங்களில் கூட எளிதாக விளையாட முடிகிறது. ஆனால் தனக்கு கிடைக்கும் சிறப்பான துவகத்தை அவர் பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் தடுமாறி வருகிறார்.

gill

இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை அவர் சரி செய்து கொண்டால் நிச்சயம் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் களமிறங்கி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்று சச்சின் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் கூட புதுப்பந்தினை இலகுவாக எதிர்கொள்ளும் அவர் சற்று கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : போட்டியின் மூன்றாம் நாளில் முன்னணி வீரர் காயம் – முக்கிய தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

மேலும் அவர் நல்ல பந்திற்கு மதிப்பு கொடுத்து விளையாடும் வேளையில் அவர் ஒரு திடமான வீரராக இந்திய அணியில் மாறுவார் என்று சச்சின் கூறியுள்ளார். அதேபோன்று மாயங்க் அகர்வால் தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் வல்லமை படைத்தவராக உள்ளார் எனவும் சச்சின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement