மும்பை டெஸ்ட் : போட்டியின் மூன்றாம் நாளில் முன்னணி வீரர் காயம் – முக்கிய தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

Agarwal
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 62 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்பின்னர் 263 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 276 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாளிலிருந்தே பலமான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

gill

இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் 540 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற அசாத்திய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது 140 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

- Advertisement -

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 400 ரன்கள் தேவை என்கிற நிலையில் நாளை காலை விரைவிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 3வது நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர் மாயங்க் அகர்வால் காயம் அடைந்ததால் இரண்டாவது இன்னிங்சில் பீல்டிங் செய்ய வரவில்லை என்று பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி மாயங்க் அகர்வால் அவரது வலது கையின் போர் ஆர்மில் அடி பட்டதால் அவர் இரண்டாவது இன்னிங்சில் பீல்டிங் செய்ய வரவில்லை என்றும் மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்காக டேவிட் வார்னர் விளையாடப்போகிறார் ? – அவரே அளித்த பதில் இதோ

அதேபோன்று ஏற்கனவே முதல் இன்னிங்சின் போது பீல்டிங் செய்கையில் சுப்மன் கில் நடுவிரலில் காயம் அடைந்ததால் அவரும் பீல்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement