IND vs ENG : 2 ஆவது டி20 போட்டியில் அணிக்கு திரும்பும் 4 சீனியர் வீரர்கள் – யாருடைய இடங்கள் பறிபோகும்

Indian Team
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அந்நாட்டு அணிக்கு எதிராக எஞ்சியிருந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய வேளையில் கடைசியாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு முதலாவது t20 போட்டியின் போது ஓய்வு வழங்கப்பட்டது.

INDIA IND vs ENG Rohit Sharma

- Advertisement -

இதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே முதல் போட்டியில் விளையாடியிருந்தது. இந்நிலையில் இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் இணையுள்ளதால் தற்போது உள்ள அணியிலிருந்து எந்தெந்த வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராத் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா ஆகிய நான்கு சீனியர் வீரர்களும் நாளைய இரண்டாவது டி20 போட்டியில் கட்டாயம் விளையாடுவார்கள் என்பதனால் எந்தெந்த வீரர்கள் இடத்தை இழக்கப் போகிறார்கள் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

bumrah

விராட் கோலி அணியில் இணைவதால் தீபக் ஹூடா வெளியேற்றப்படுவது உறுதி. அதேபோன்று ஏற்கனவே தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரிஷப் பண்ட் உள்ளே வரும்போது இஷான் கிஷன் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று ஜடேஜா அணிக்குள் வருவதால் அக்சர் பட்டேல் நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது. பும்ரா வருவதால் அர்ஷ்தீப் சிங் வெளியேறுவார். இப்படி இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அணிக்குள் நுழைவதால் எந்தெந்த மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரண்டாவது டி20 போட்டி சுவாரஸ்யமாக அமைய உள்ளது.

இதையும் படிங்க : இப்போதையே ப்ளேயர்ஸ் மாதிரி அல்லாமல் 13 வருடம் தொடர்ந்து விளையாடினேன் ஆனாலும் – ஆதங்கப்படும் சௌரவ் கங்குலி

இந்த ஆண்டு இறுதியில் உலகக்கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாலில் நடைபெற உள்ள வேளையில் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுவதால் இந்த தொடரில் அற்புதமாக செயல்படும் வீரர்கள் எதிர்வரும் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதனால் அனைத்து வீரர்களுக்குமே இந்த தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement