IND vs SL : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்த இலங்கை அணியானது அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs SL

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடருக்கான இந்திய அணியில் முழுவதுமாக இளம் வீரர்களே விளையாடியதை அடுத்து தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் இடம்பெறுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்க்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் நாளை ஜனவரி 10-ஆம் தேதி கவுஹாத்தியில் துவங்க இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. அந்த வகையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த உத்தேசப்பட்டியலை தான் நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Ishan-Kishan

அதன்படி கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பதால் அவருடன் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்.

- Advertisement -

ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் விளையாடுவார்கள். அவர்களை தவிர்த்து பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs SL : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எத்தனை மணிக்கு துவங்குகிறது – எந்த சேனலில் பார்க்கலாம்?

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement