IND vs SL : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எத்தனை மணிக்கு துவங்குகிறது – எந்த சேனலில் பார்க்கலாம்?

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது நாளை துவங்கவுள்ளது.

Hardik-Pandya

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடியது.

அதனை தொடர்ந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த ஒருநாள் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் உச்சத்தை தோற்றுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்தெந்த தேதிகளில்? எந்தெந்த மைதானங்களில் நடைபெறுகிறது? என்பது குறித்த விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

IND

அதேபோன்று இந்த ஒருநாள் தொடரை எந்த சேனலில் நேரலையாக கண்டு களிக்கலாம் என்பது குறித்த ஒளிபரப்பு விவரங்களையும் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நாளை ஜனவரி 10-ஆம் தேதி நாளை துவங்குகிறது.

- Advertisement -

அதற்கு அடுத்த இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 12-ஆம் தேதியும், அதற்கு அடுத்து மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியானது ஜனவரி 15-ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுமே இந்திய நேரப்படி பகல் 1:30 மணிக்கு துவங்கும் என்று அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சஹால் இருந்தா என்ன? 2023 உ.கோ வெல்ல அவர் நிச்சயம் தேவை – தமிழக வீரருக்கு ஆதரவுடன் அஜய் ஜடேஜா வெளியிட்ட பவுலிங் வரிசை

மேலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மூலம் கண்டு களிக்கலாம். அதுமட்டும் இன்றி நேரலையில் ஆன்லைன் மூலம் காண விரும்புவோர் ஹாட் ஸ்டார் ஆப்பின் மூலம் கண்டுபிடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement