வரலாற்றில் “ஐசிசி கிரிக்கெட்டெர் ஆஃப் தி இயர் விருது” வென்ற இந்தியர்களின் – மொத்த பட்டியல் இதோ

cricketer
- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் ஒருநாள் மற்றும் டி20 கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பிடிக்காத நிலையில் டெஸ்ட் கனவு அணியில் மட்டும் ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட் ஆகிய 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக தனிநபர் விருதுகள் பிரிவில் இந்த முறை ஒரு இந்திய வீரர் கூட எந்த விருதும் வாங்கவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ICC

- Advertisement -

ஐசிசி கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்:
இருப்பினும் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா “2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை” என்ற முக்கிய விருதை வென்ற இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார். இந்நிலையில் வரலாற்றில் “ஐசிசி கிரிக்கெட் ஆப் தி இயர்” அதாவது “வருடத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்” என்ற விருதை பெற்ற இந்தியர்கள் பற்றிய பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

அதற்கு முன்பாக ஐசிசி வழங்கும் தனிநபர் விருதுகளில் இந்த விருது தான் மிகவும் உயரியதாகும். ஏனெனில் இந்த விருதானது டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அந்த வருடத்தில் சிறந்து விளங்கிய வீரருக்கு வழங்கப்படும் விருதாகும்.

Dravid

1. ராகுல் டிராவிட் (2004) :
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் சிறந்து விளங்கும் வீரரை கௌரவப்படுத்தும் வண்ணம் இந்த விருதை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த விருதானது வெஸ்ட் இண்டீசின் முன்னாள் ஜாம்பவான் “சர் கர்பீல்டு சோபர்ஸ்” பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 2 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் ஜாம்பவான் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “2004ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்” என்ற இந்த விருதை முதல் முறையாக வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் அந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார்.

goswami

2. ஜூலன் கோஸ்வாமி (2007) :
கடந்த 2006 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைக்கு இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் தலை சிறந்த வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசினார்.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்தின் டவுண்டன் நகரில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் வாயிலாக கடந்த 2007ஆம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற இவர் இந்த விருதை பெறும் முதல் இந்திய வீராங்கனையாக அசத்தினார்.

Sachin 1

3. சச்சின் டெண்டுல்கர் (2010):
இந்தியாவின் மகத்தான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றார். கடந்த 2010இல் அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்களையும் 17 ஒருநாள் போட்டிகளில் 914 ரன்களையும் எடுத்து இந்த விருதுக்காக வீரேந்திர சேவாக், ஹாஷிம் அம்லா, கிரேம் ஸ்வான் ஆகிய வீரர்களுடன் போட்டி போட்டார்.

- Advertisement -

ஆனால் அந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக குவாலியர் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் “வரலாற்றிலேயே முதல் முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் (200*)” என்ற உலக சாதனை படைத்ததால் இந்த விருதை சச்சின் அள்ளிச்சென்றார்.

ashwin 1

4. ரவிச்சந்திரன் அஷ்வின் (2016) :
தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2016 ஆம் ஆண்டு 12 டெஸ்ட் போட்டிகளில் 72 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அத்துடன் 2 சதங்களையும் 3 அரைசதங்களையும் விளாசினார். இதன் காரணமாக “அந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றது மட்டுமல்லாமல் அந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் வீரர்” என்ற விருதையும் அள்ளினார்.

5. விராட் கோலி (2017 & 2018) :
இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 2203 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 1818 ரன்களையும் விளாசினார். அத்துடன் டி20 கிரிக்கெட்டிலும் 299 ரன்களை குவித்தார்.

Kohli-2

அந்த வருடத்தில் மட்டும் 15 சதங்களை விளாசிய அவருக்கு அந்த வருடத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற இந்த விருதை ஐசிசி வழங்கியது. அந்த பார்மை அப்படியே 2018ஆம் ஆண்டிலும் தொடர்ந்த அவர் மலைபோல ரன்களை விளாசியதுடன் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10,000 ரன்களை அடித்த வீரர்” என்ற உலக சாதனையும் படைத்தார்.

அதன் காரணமாக ஒரு படி மேலே சென்ற விராட் கோலி 2018 ஆம் ஆண்டிற்கான “சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட், சிறந்த ஒருநாள் வீரர்” ஆகிய ஐசிசியின் 3 முக்கிய விருதுகளையும் ஒரே வருடத்தில் வென்று உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். இதன் வாயிலாக இந்த 3 ஐசிசி விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் “வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்” என்ற விருதை அடுத்தடுத்த 2 தொடர்ச்சியான ஆண்டுகளில் வென்ற ஒரே வீரர் (2017 & 2018) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

mandhana 2

5. ஸ்மிரிதி மந்தனா (2018 & 2021) :
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 669 ரன்களையும் டி20 கிரிக்கெட்டில் 622 ரன்களையும் விளாசி அந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றார். அத்துடன் அந்த ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் அவர் பெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டிலும் அபாரமாக செயல்பட்ட அவர் மொத்தமாக 22 போட்டிகளில் 885 ரன்களை விளாசினார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.

இதையும் படிங்க : ரோஹித் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – முழு பட்டியல் இதோ

இதன் வாயிலாக 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை மீண்டும் வென்றுள்ள அவர் “இந்த விருதை 2வது முறையாக வெல்லும் ஒரே இந்திய கிரிக்கெட் வீராங்கனை” என்ற சாதனை படைத்துள்ளார்.

Advertisement