ரோஹித் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – முழு பட்டியல் இதோ

- Advertisement -

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேட்டன் சர்மா தலைமையில் மும்பையில் நேற்று கூடிய இந்திய தேர்வு குழுவினர் இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளார்கள். இதில் ஒருநாள் மற்றும் டி20 என 2 வகையான தொடருக்கும் முதல் முறையாக ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

Rohith

- Advertisement -

திரும்பிய ரோஹித் & குல்தீப் யாதவ்:
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மா தற்போது முழுமையாக குணமடைந்து இந்த தொடருக்கு கேப்டன்ஷிப் செய்ய உள்ளார். இந்த 2 தொடர்களிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ளார்.

அதேபோல சமீபகாலமாக காயத்தால் இந்திய அணியில் முற்றிலுமாக விலகி இருந்த சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீண்ட நாட்கள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

Rohith

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:
இந்தியாவுக்காக 2020 அண்டர் 19 உலக கோப்பையில் அசத்தி பின்னர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அசத்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் “ரவி பிஷ்னோய்” முதல் முறையாக இந்த இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் மற்றொரு இளம் வீரர் தீபக் ஹூடா முதல்முறையாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கிய மற்றொரு இளம் வீரர் அவேஷ் கான் பெயர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கழட்டி விடப்பட்டு டி20 தொடரில் மட்டும் இடம் பிடித்துள்ளார். அதேபோல் மற்றொரு இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் டி20 தொடரில் கழட்டி விடப்பட்டு ஒருநாள் தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Sundar-1

அதே சமயம் காயத்தால் கடந்த தென் ஆப்ரிக்க தொடரில் விலகிய தமிழகத்தின் சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரை போல மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

நீக்கப்பட்ட புவனேஸ்வர் :
சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் மோசமாக பந்துவீசிய அனுபவம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கழட்டி விடப்பட்டுள்ளார். ஆனால் கடைசி வாய்ப்பாக டி20 தொடரில் மட்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Bhuvi

அதேபோல் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்து வீசவில்லை என்பதால் அவரின் பெயர் இந்த தொடரில் இடம் பெறவில்லை. மேலும் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 அணிகளிலும் தமிழகத்தின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு:
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முழு தொடரிலும் முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு அதன்பின் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் திரும்ப உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து மீண்டும் விலகியுள்ளார்.

Bumrah

வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இதோ :
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்) , ரிஷப் பண்ட் (கீப்பர்), விராட் கோலி, ருதுராஜ் கைக்வாட், ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, தீபக் சஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமத் சிராஜ், பிரசித் கிருஷ்னா அவேஷ் கான்.

வெஸ்ட்இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி இதோ:
ரோஹித் (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (கீப்பர்), விராட் கோலி, இஷான் கிஷான், ஷ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹர், ஷர்டுல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், முஹமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

Advertisement