வங்கதேச தொடருக்கு அழைத்து சென்று இளம் வீரரை அசிங்கப்படுத்திய பி.சி.சி.ஐ – ரசிகர்கள் கொதிப்பு

Abhimanyu-Easwaran
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்த வேளையில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

IND-vs-BAN

- Advertisement -

அடுத்ததாக தற்போது இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்று அவர்களை வாஷ்அவுட் செய்ய இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட கட்டை விரல் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறினார். அதனால் ரோகித்துக்கு பதிலாக மாற்றுவீரராக பெங்கால் அணியைச் சேர்ந்த துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் அனைத்து தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாக வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதலாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Abhimanyu-Easwaran

இந்நிலையில் இரண்டாவது போட்டியிலும் கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பது உறுதியாகியுள்ளதால் தற்போது அபிமன்யு ஈஸ்வரன் குறித்து ரசிகர்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் அவர் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி தொடரில் பெங்கால் அணியின் கேப்டனாக அவர் விளையாடி இருப்பார். இப்படி ஒரு சிறப்பான வீரரை கொண்டு சென்று அங்கு பெஞ்சில் அமர வைப்பதற்கு அவர் இங்கே இருந்திருந்தால் கூட ரஞ்சி தொடரில் விளையாடி இருப்பார் என ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : தேவையான அவரை எப்படியாவது வாங்கிடுங்க – மும்பை அணிக்கு அனில் கும்ப்ளே பரிந்துரைக்கும் ஜிம் வீரர் யார்

அதோடு இந்திய அணிக்காக இப்படி திறமையான சில இளம் வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்தாலும் அவர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்க மறுக்கிறார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மீது கடிந்து ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement