அனுபவ வீரரா இருந்தாலும் இன்னைக்கு இவருக்கு மட்டும் வாய்ப்பு குடுத்துடாதீங்க ப்ளீஸ் – ரசிகர்கள் கோரிக்கை

Bhuvi
- Advertisement -

இந்திய அணியின் புதிய கேப்டனாக பதவி ஏற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதலாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்குகிறது. அனுபவ வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்த புதிய இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

Bhuvi

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பளிக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் என்னதான் சீனியர் வீரராக புவனேஷ்வர் குமார் திகழ்ந்தாலும் அடிக்கடி காயத்தால் சிக்கி தனது வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றை இழந்துள்ளார்.

அதுமட்டுமின்றி முன்பைப் போன்று அவரால் விரைவில் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தடுமாறுவது மட்டுமின்றி அதிக ரன்களுக்கும் செல்கிறார். உலகக்கோப்பையில் அவரது செயல்பாடு திருப்தி அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக சீனியர் வீரராக இருந்தாலும் சரி அவரது மோசமான பார்மை முன்னிறுத்தி அவரை விளையாட வைக்க கூடாது என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை முயற்சி செய்து பார்க்கும் வகையில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல் மற்றும் டெல்லி அணிக்காக அசத்தலாக பந்துவீசிய ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு அறிமுகம் வாய்ப்பை கொடுக்கலாம் என்றும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsNZ : இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ள 2 இளம் வீரர்கள் – விவரம் இதோ

இதில் ஆவேஷ் கான் மிகவும் வேகமாக பந்து வீசும் திறன் உடையவர். ஹர்ஷல் படேல் சற்று வேரியேஷன்களுடன் மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement