INDvsNZ : இன்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ள 2 இளம் வீரர்கள் – விவரம் இதோ

Williamson
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக இன்று துவங்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் இந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது. உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இன்று களமிறங்க உள்ளது.

Rohith

- Advertisement -

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் சில குறிப்பிட்ட இடங்களை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவும் பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் 2 வீரர்களுக்கு இன்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் இன்று ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தற்போதைய அணியில் ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் மட்டுமே இருப்பதனால் அவர் நிச்சயம் 6ஆவது பேட்ஸ்மேனாகவும், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இருப்பார் என்று தெரிகிறது.

avesh

இதன் காரணமாக வெங்கடேஷ் ஐயர் இந்த போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே போன்று இரண்டாவது வீரராக ஆவேஷ் கான் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் தென்படுகிறது. ஏனெனில் தற்போதைய அணியில் முகமது சிராஜ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் பட்சத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த 10 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி தொடர்கள். 8 டோர்னமென்ட் 14 நாடுகள் – முழு விவரம் இதோ

ஏனெனில் புவனேஸ்வர் குமார் தற்போது சரியான பார்மில் இல்லாததால் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் தனது சிறப்பான பந்து வீச்சில் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement