அடுத்த 10 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி தொடர்கள். 8 டோர்னமென்ட் 14 நாடுகள் – முழு விவரம் இதோ

worldcup
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பை பெறுவது ஐசிசி நடத்தும் தொடர்கள் தான். ஏனெனில் இருதரப்பு அணிகளுக்கு இடையே நடைபெறும் கோப்பையை விட அனைத்து அணிகளும் பங்கேற்கும் ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்வது மிக பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தியது.

இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்களின் விவரத்தை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்படி அடுத்த 10 ஆண்டிற்குள் 8 ஐசிசி தொடர்கள் நடைபெற உள்ளன. மேலும் இந்த 8 தொடர்களும் 14 வெவ்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.

- Advertisement -

2024 ஆம் ஆண்டு : T20 உலக கோப்பை – வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
2025 ஆம் ஆண்டு : சாம்பியன்ஸ் டிராபி – பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
2026 ஆம் ஆண்டு : T20 உலகக் கோப்பை – இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
2027 ஆம் ஆண்டு : 50 ஓவர் உலகக் கோப்பை – சவுத் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
2028 ஆம் ஆண்டு : T20 உலகக்கோப்பை – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
2029 ஆம் ஆண்டு : சாம்பியன்ஸ் டிராபி – இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
2030 ஆம் ஆண்டு : டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
2031 ஆம் ஆண்டு : 50 ஓவர் உலக கோப்பை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இதில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் முதல் முறையாக ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போன்று அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மூன்று முறை ஐசிசி தொடர்கள் நடைபெற உள்ளது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்திதான்.

Advertisement