IND vs AUS : போதும்டா சாமி. அவரை மொதல்ல டீம்ல இருந்து தூக்குங்க. இந்திய வீரருக்கு எதிராக – ரசிகர்கள் கருத்து

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது பிப்ரவரி 17-ஆம் தேதி நேற்று வெள்ளிக்கிழமை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 263 ரன்களுக்கு தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

Shami 1

- Advertisement -

அதன் பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேரத்தில் முதல் செஷனில் 54 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இதில் ரோகித் சர்மா சற்று சுதாரித்து 32 ரன்கள் அடித்தாலும், மற்றொருபுறம் இந்திய அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் இம்முறையும் 41 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே குவித்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இப்படி ராகுல் மீண்டும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஆட்டம் இழந்து வெளியேறியதுமே அவருக்கு எதிரான விமர்சனங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

Gill

ஏற்கனவே கே.எல் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும் அவரது துணை கேப்டன் பதவி தான் அவரை காப்பாற்றுகிறது என்றும் அவருக்கு இவ்வளவு வாய்ப்புகளை கொடுக்கக்கூடாது என்றும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. அதேபோன்று சுப்மன் கில் தனது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் போது இப்படி தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு அளிப்பது ஏன் என்று பலரும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் கே.எல் ராகுல் சொதப்பியதுமே அவரை வெளியேற்றிவிட்டு சுப்மன் கில்-க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அனைவரும் கூறிவந்த வேளையில் தற்போது இரண்டாவதாக இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பையும் அவர் தவற விட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : முதல் கோப்பை வெல்லுமா – பெங்களூரு அணியின் முழு அட்டவணை, அணி வீரர்கள் விவரம்

ராகுலின் இந்த மோசமான ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் பலர் அவருக்கு வாய்ப்பு கொடுத்தவரை போதும். மீண்டும் அவரை டொமஸ்டிக் கிரிக்கெட்க்கு திரும்ப அனுப்பி அவர் பார்முக்கு வந்தால் இந்திய அணியில் தேர்வு செய்யுங்கள். அதுவரை கில் விளையாடட்டும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement