ஐபிஎல் 2023 : முதல் கோப்பை வெல்லுமா – பெங்களூரு அணியின் முழு அட்டவணை, அணி வீரர்கள் விவரம்

RCB Faf Du Plessis
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 15 வருடங்களாக முதல் கோப்பையை வெல்ல போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏரளமான உலக தரம் வாய்ந்த வீரர்கள் விளையாடியும் இதுவரை கோப்பையை தொட முடியாமல் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ள அந்த அணி கடந்த வருடம் பப் டு பிளேசிஸ் தலைமையில் களமிறங்கி லீக் சுற்றில் அசத்திய போதிலும் நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி ஏமாற்றத்தை சந்தித்தது.

RCB Faf Virat

- Advertisement -

இருப்பினும் கடந்த வருடம் நிறைய சாதகங்களை பெற்ற அந்த அணிக்கு ரஜத் படிதார் போன்ற இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டதும் தினேஷ் கார்த்திக் புதிய ஃபினிஷராக அவதரித்ததும் இந்த சீசனில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அதை விட கடந்த வருடம் தடுமாறிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இம்முறை முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. அத்துடன் இம்முறை தங்களது அந்த மைதானமான சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் பெங்களூரு அணி சில முக்கிய போட்டிகளில் விளையாடுவது மேலும் பலத்தை சேர்க்கிறது.

பெங்களூரு அட்டவணை:
எனவே அந்த பலத்துடன் தங்களது வாழ்நாள் கனவான முதல் ஐபிஎல் கோப்பையை இந்த சீசனில் வென்று இதுநாள் வரை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது. அந்த அணியின் முழுமையான அட்டவணை இதோ:

Rajat Patidar 112

1. ஏப்ரல் 2, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு
2. ஏப்ரல் 6, இரவு 7.30 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா
3. ஏப்ரல் 10, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்சி பெங்களூரு V லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ், பெங்களூரு
4. ஏப்ரல் 15, மதியம் 3.30 : ராயல் சேலஞ்ச் பெங்களூரு V டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு
5. ஏப்ரல் 17, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
6. ஏப்ரல் 20, மதியம் 3.30 : பஞ்சாப் கிங்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மொஹாலி
7. ஏப்ரல் 23, மதியம் 3.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு

- Advertisement -

RCB vs PBKS Extras

8. ஏப்ரல் 26, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு
9. மே 1, இரவு 7.30 : லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ
10. மே 6, இரவு 7.30 : டெல்லி கேப்பிடல்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி
11. மே 9, இரவு 7.30 : மும்பை இந்தியன்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
12. மே 14, மதியம் 3.30 : ராஜஸ்தான் ராயல்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர்
13. மே 18, இரவு 7.30 : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத்
14. மே 21, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 : 6வது கோப்பை வெல்லுமா – மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை, அணி வீரர்கள்

பெங்களூரு அணி: பப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), பின் ஆலன், விராட் கோலி, ரஜத் படிடார், சுயஷ் பிரபுதேசாய் , வில் ஜேக்ஸ், அனுஜ் ரவாத், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, மகிபால் லோம்ரர், கிளன் மேக்ஸ்வெல், ஷபாஸ் அஹ்மத், சோனு யாதவ், மனோஜ் பாண்டேஜ், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசல்வுட், சித்தார்த் கௌல், முகமத் சிராஜ், ஹர்ஷல் பட்டேல், கர்ண் சர்மா, டேவிட் வில்லி, அவினாஷ் சிங், ராஜன் குமார், ரீஸ் டாப்லி, ஹிமான்சு சர்மா

Advertisement