
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மார்ச் இரண்டாம் தேதியான இன்று துபாய் மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளும் குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன் இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதன்காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் பிடிக்கும். இதன் காரணமாக குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும்.
அதனால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதி போட்டியில் தெனனாப்பிரிக்க அணியுடன் மோதும் பட்சத்தில் இந்திய அணி அவர்களை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். அதே போன்று இறுதி போட்டியில் ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலிய அணி சந்திக்கும்.
அப்படி நடந்தால் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக அந்த போட்டியில் அவர்களை வீழ்த்தலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்திய அணி இந்த தொடரை துபாய் மண்ணில் மட்டுமே விளையாடி வருவதால் இதுவரை இந்த தொடரில் துபாய் மண்ணில் விளையாடாத தென்னாப்பிரிக்கா அணியை அரையிறுதியில் இந்திய அணியால் எளிதாக வீழ்த்த முடியும்.
இதையும் படிங்க : இதுமட்டும் நடந்தா ஷமிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பிரச்சனை தான் – ஆகாஷ் சோப்ரா
அதேபோன்று ஆஸ்திரேலியாவும் துபாய்க்கு வரும்போது இந்திய அணி நல்ல பரீட்சையம் கொண்ட அணியாக அவர்களையும் வீழ்த்தும் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையுடன் இருந்தாலும் இந்திய அணியை விட நியூசிலாந்து +0.2 விகிதத்தில் ரன் ரேட்டில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.