IND vs WI : அப்படி இவரு என்ன பண்ணிட்டாருனு டி20 அணியில் சேன்ஸ் குடுத்தீங்க. இந்திய பவுலரை – கலாய்க்கும் ரசிகர்கள்

Avesh-Khan
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

indvswi

- Advertisement -

அதனை தொடர்ந்து எஞ்சியிருந்த டி20 தொடருக்கான இந்திய அணியையும் பி.சி.சி ஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான 15 இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கப்பட்ட இந்த அணியில் செய்யப்பட்டுள்ள தவறுகள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ரசிகர்களும் அணித்தேர்வில் உள்ள ஒரு சில தவறுகளை குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்து இந்திய அணியின் தேர்வை கிண்டல் செய்து வருகின்றனர்.

Avesh-Khan-2

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானை ஏன் தேர்வு செய்துள்ளீர்கள்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய பல பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ஆவேஷ் கான் கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சிறப்பாக பந்து வீசாததால் அவரை ஏன் தேர்வு செய்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

ரசிகர்கள் குறிப்பிடுவது போலவே ஆவேஷ் கான் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரின் போது பெரிய அளவில் எந்த போட்டியிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. அதோடு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுக்கும் அவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதே கிடையாது.

இதையும் படிங்க : Ashes 2023 : பரபரக்கும் 3வது டெஸ்ட் – ஜாம்பவான்கள் கேரி சோபர்ஸ், ஜேக் காலிஸ் ஆல் டைம் உலக சாதனையை சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்

இப்படி ஒரு நிலையில் அவரை ஏன் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது என்று கிண்டல் அடித்துள்ளனர். அதே வேளையில் அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருக்கும் வேறு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாமே என்றும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement