இஷான் கிஷனை விட அவரு அவ்ளோ சூப்பர் விக்கெட் கீப்பரா? அவருக்கு எதுக்கு வாய்ப்பு – ரசிகர்கள் கேள்வி

Team India Dinesh Karthik Ishan Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 10-ஆம் தேதி இன்று மதியம் 1:30 மணிக்கு கவுஹாத்தி மைதானத்தில் துவங்கவுள்ளது.

INDvsSL

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்து இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது துவக்க வீரராக யாருடன் களமிறங்குவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா : சுப்மன் கில்லிற்கு தான் துவக்க வீரர்க்கான வாய்ப்பு கொடுக்கப்படும்.

அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவதால் அவரது வாய்ப்பை பறிக்க முடியாது என்பதன் காரணமாக அவருடனே தான் களமிறங்குவேன் என்பதை உறுதி செய்தார். இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் விளையாட மாட்டார் என்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இஷான் கிஷனை விளையாட வைக்காதது தவறு என்று இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பெற்ற இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்திருந்தார்.

KL-Rahul

மிக இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்து தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷனை வெளியே அமர்த்தி விட்டு சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கொடுத்தது தவறு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே வேளையில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலை ஏன் விளையாட வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் இஷான் கிஷனால் மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியும். அதேபோன்று பேட்டிங்கும் செய்ய முடியும் அவரை தவிர்த்து பகுதி நேர விக்கெட் கீப்பராக இருக்கும் கே.எல் ராகுலை ஏன் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட வைக்க வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : என்னோட கரியர்ல நான் பாத்து பயந்த 2 பவுலர்கள் இவர்கள்தான் – டூபிளிசிஸ் ஓபன்டாக்

ஏற்கனவே இந்திய அணியின் ஒருநாள் துணைக்கேப்டனாக இருந்த ராகுலின் பதவி பறிக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் கே.எல் ராகுலை தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரித்து வருகிறது. ஆனாலும் அவர் தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும் அவரை வெளியேற்றாமல் இஷான் கிஷன் போன்ற திறமையான வீரர்களை வெளியே அமர வைத்தது தவறு என்றும் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement