என்னோட கரியர்ல நான் பாத்து பயந்த 2 பவுலர்கள் இவர்கள்தான் – டூபிளிசிஸ் ஓபன்டாக்

Faf
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த டூபிளிசிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 69 டெஸ்ட் போட்டிகள், 143 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட 262 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,198 ரன்களையும் குவித்துள்ளார். தனது கிரிக்கெட் கரியரின் பிற்பகுதியில் அறிமுகமாகியிருந்தாலும் மிகச் சிறப்பான வீரராக அவர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

faf

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவதை தவிர்த்து ஐ.பி.எல், பிக்பேஷ், கரீபியன் லீக் என உலகெங்கிலும் நடக்கும் அனைத்து டி20 கிரிக்கெட் தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் சென்னை சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வந்த இவர் தற்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அதேபோன்று தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள டி20 லீக் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ள ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட இருக்கிறார்.

Jadeja

இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் கரியரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து பேட்டி அளித்துள்ள டூப்ளிசிஸ் கூறுகையில் : என்னுடைய கிரிக்கெட் கரியரில் நான் இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் சவால்களை எதிர்கொண்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பேசாம ஒரு டாக்டரை போடுங்க, யோ-யோ டெஸ்ட்டை கொண்டு வரும் பிசிசிஐ முடிவு பற்றி கவாஸ்கர் அதிரடி கருத்து

அதில் ஒருவர் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான சையத் அஜ்மல் மற்றொருவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா இவர்கள் இருவரை எதிர்கொள்ளும்போதுதான் எனக்கு சவாலாகவும் கடினமாகவும் இருந்தது என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement