பி.சி.சி.ஐ எப்படி இதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்காங்க? தினேஷ் கார்த்திக் செயலால் – ரசிகர்கள் கொந்தளிப்பு

Dinesh-Karthik
- Advertisement -

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இங்கிலாந்து அணி வீரர்கள் துபாய் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களை தவிர்த்து இரண்டாம் தர அணியான இங்கிலாந்து லயன்ஸ் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமானது இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி போட்டிகளில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஜனவரி 12-ஆம் தேதி நாளை துவங்கும் 2 நாட்கள் பயிற்சி போட்டியிலும், அதன்பிறகு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறும் நான்கு நாட்கள் பயிற்சி போட்டியிலும் இங்கிலாந்து லயன்ஸ் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் முதன்மை இங்கிலாந்து அணி வீரர்களுடன் பயிற்சியாளர்கள் குழுவை சேர்ந்த இயான் பெல் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதினால் அவர்கள் ஜனவரி 18-ஆம் தேதியே இந்தியா வர இருக்கின்றனர்.

அதற்கு முன்னதாக இந்தியாவில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வழிநடத்த ஒரு ஆள் தேவை என்பதால் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கை 9 நாட்கள் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பயிற்சி ஆலோசகராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இப்படி இரண்டாம் தர இங்கிலாந்து அணிக்கு தினேஷ் கார்த்திக் ஆலோசகராக இருக்கப்போவது தான் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனம், இந்திய மைதானங்களில் தன்மை குறித்து இங்கிலாந்து அணியின் இரண்டாம் தர வீரர்களிடம் இந்த பதவியின் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இப்படி நமது யுக்திகளை அவர்களிடம் பகிர்ந்தால் அது தவறு என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இவரு மட்டும் 20 ரன் அடிச்சா போதும்.. இந்தியா தோத்ததே கிடையாது.. – வியக்க வைக்கும் இளம்வீரரின் கைராசி

மேலும் தினேஷ் கார்த்திக் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாத வேளையில் எப்படி மற்றொரு நாட்டின் ஆலோசகராக செயல்பட முடியும். இதற்கு பிசிசிஐ எப்படி ஒத்துழைக்கிறது? என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement