IND vs ZIM : என்னதான் இந்திய அணி ஜெயிச்சிருந்தாலும் அவருக்கு ஏன் வாய்ப்பு குடுக்கல – ரசிகர்கள் கொந்தளிப்பு

Prasidh-Krishna
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருவதால் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு விளையாடப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதல் போட்டியிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி வீழ்த்தியது.

Shubman Gill

- Advertisement -

அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியானது 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது 30.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 192 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

tripathi

இவ்வேளையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் திரிபாதியை ஏன் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தவான், கில், ராகுல், சாம்சன், இஷான் கிஷன் என ஐந்து துவக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs ZIM : வாய் சவடால் விட்டு அவமானப்பட்டு வெளியேறிய ஜிம்பாப்வே வீரர் – என்ன நடந்தது?

அது மட்டும் இன்றி சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல் ராகுல் என மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் இறங்கி இருந்தனர். எனவே அவர்கள் யாராவது ஒருவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் அற்புதமாக பேட்டிங் செய்யும் ராகுல் திரிபாதிக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று சமூகவளைதலம் மூலமாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement