IND vs ZIM : வாய் சவடால் விட்டு அவமானப்பட்டு வெளியேறிய ஜிம்பாப்வே வீரர் – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

KL-Rahul

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்கள். சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 192 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ஷிகார் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களையும் அடித்தனர்.

ryan

இந்நிலையில் இந்த போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிப்பேன் என்று இந்த தொடருக்கு முன்னர் பேட்டி அளித்திருந்த ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இந்த முதலாவது போட்டியில் 18 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததார்.

- Advertisement -

இப்படி சொற்ப ரன்களிலேயே அவர் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்த அவர் அவமானத்துடன் நடையை கட்டினார். ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என 34 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : IND vs ZIM : ஒரே ஆண்டில் செகன்ட் டைம்.. இந்திய அணி நிகழ்த்திய அசத்தலான சாதனை – விவரம் இதோ

அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடிக்க விருப்பப்படுகிறேன் என்று பேட்டி அளித்திருந்த வேளையில் தற்போது 11 ரன்களிலேயே அவர் ஆட்டம் இழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் கேலிக்கு உரிய விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement