டெஸ்டில் விட்ட கௌரவத்தை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெற்று தருவாரா ரோஹித் சர்மா – முழு விவரம் இதோ

INDvsWI
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* என தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 16 அன்று துவங்கிய இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா நேற்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்தது.

INDvsWI

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பேட்டிங்கில் அசத்திய விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே தலா 52 ரன்கள் விளாசினார்கள். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரஸ்டன் சேஸ் 3 விக்கெட்களை எடுத்தார்.

இந்தியா சூப்பர் வெற்றி:
இதை தொடர்ந்து 186 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் போட்டியை போலவே பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 20 ஓவர்களில் 178/3 மட்டுமே எடுக்க முடிந்தது. ஆரம்பத்தில் திணறிய அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரான் 41 பந்துகளில் 62 ரன்களும் ரோவ்மன் போவெல் 36 பந்துகளில் 68* ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய போதிலும் வெஸ்ட்இண்டீஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை.

IND

இறுதியில் 8 ரன்கள் வித்யாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இந்த டி20 தொடரின் கோப்பையை ஒரு போட்டிக்கு முன்பாகவே கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் 52* ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கபட்டார்.

- Advertisement -

5 தொடர் வெற்றிகள்:
முன்னதாக இந்த 2022 புத்தாண்டை தென்ஆப்பிரிக்காவில் துவக்கிய இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் பரிதாப தோல்வி அடைந்ததுடன் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் கோட்டை விட்டது. அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரு வெற்றியை கூட பெற முடியாத கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி படுமோசமான வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

IND

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அந்த சமயத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் இந்தியா 5 அடுத்தடுத்த தொடர் தோல்விகளுடன் புத்தாண்டில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் பரிதவித்தது. அந்த மோசமான தருணத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த கேப்டன் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து அடுத்தடுத்த 5 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதலில் நடந்த ஒருநாள் தொடரை 3 – 0 என வென்று கொடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையும் படைத்தார்.

Rohith-1

டி20 கௌரவத்தை பெற்றுத்தருவரா:
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் உலகின் புதிய நம்பர் 1 டி20 அணியாக புதிய சாதனையைப் இந்தியா படைக்கும். டி20 போட்டிகளுக்கான தற்போதைய ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடத்தில் உள்ளது. எனவே நாளைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் நீண்ட காலமாக நம்பர் ஒன் அணியாக இருந்து வரும் இங்கிலாந்தை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக சாதனை படைக்க இந்தியாவுக்கு பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்த இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை இழந்து தவிக்கிறது. இந்த வேளையில் நாளைய போட்டியில் வெற்றியை பெற்றுக்கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த கௌரவத்தை டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா வாங்கித் தருவாரா என்ற எதிர்ப்பார்ப்புடன் இப்போடிக்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : இதனால் தான் தோனி இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க விக்கெட் கீப்பர் ! எதனால பாருங்க

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய வெள்ளைப்பந்து அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா இந்தியாவிற்காக இதுவரை 37 டி20 போட்டிகளில் 31 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இந்தியாவை வெற்றிநடை போடவைத்துள்ளார். எனவே டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா புதிய நம்பர் ஒன் டி20 அணியாக வெற்றிநடை போடுவதைப் விரைவில் பார்க்க முடியும் என நம்பலாம்.

Advertisement