இதனால் தான் தோனி இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க விக்கெட் கீப்பர் ! எதனால பாருங்க

dhoni with pant
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/5 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 52 ரன்கள் அடித்தார்கள்.

prasidh 1

- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து 187 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் முதல் போட்டியை போலவே ஆரம்பத்தில் பேட்டிங்கில் சொதப்பியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அந்த அணியின் நிக்கோலஸ் பூரான் 62 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் அவுட்டானார்.

இந்தியா வெற்றி:
இருப்பினும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்து வந்த ரோவ்மன் போவெல் 36 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 68* ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்ய கடைசி வரை போராடினார். குறிப்பாக வெற்றிக்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது மிரட்டல் ஜோடியான போவெல் – பொல்லார்ட் ஜோடியால் 16 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தக் கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் 4 ரன்கள் மட்டும் கொடுக்க கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

IND

இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த இந்தியா இப்போட்டியிலும் வென்ற காரணத்தால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மறுபுறம் கடந்த வாரம் ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராக 3 – 0 என வைட்வாஷ் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் இந்த டி20 தொடரிலும் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் ரிஷப் பண்ட்:
இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கடைசி நேரத்தில் வெறும் 28 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 52* ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையையும் அவர் படைத்தார்.

pant

மேலும் தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் ஆகியோருக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருது வெல்லும் 3வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

- Advertisement -

மிகசிறந்த தோனி:
இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய விக்கெட் கீப்பர்கள் இதோ:
1. எம்எஸ் தோனி : 22 ஆட்டநாயகன் விருதுகள்
2. ரிஷப் பண்ட் : 3* ஆட்டநாயகன் விருதுகள்
கேஎல் ராகுல்/ராகுல் டிராவிட் : 2 ஆட்டநாயகன் விருதுகள்.

dhoni with pant

மேற்குறிப்பிட்டுள்ள பட்டியலைப் பார்க்கும்போது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது எம்எஸ் தோனி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் விக்கெட் கீப்பர்கள் என்றால் வெறும் பந்தை பிடித்து போடும் ஒரு வீரராக அணியில் பெயருக்கு இடம் பிடித்து வந்தார்கள். ஆனால் கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பொன்னாக கிடைத்த எம்எஸ் தோனி அந்த வரலாற்றை அப்படியே மாற்றி எழுதி விட்டார் என்று கூறலாம்.

- Advertisement -

அவர் இந்தியாவுக்கு அறிமுகமான பின் அதிரடியாக பேட்டிங் செய்து மெகா சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுக்க தொடங்கினார். குறிப்பாக மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி இந்தியா தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் தனி ஒருவனாக நின்ற அவர் போராடி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே அவரை ஒரு மிகசிறந்த பினிஷெர் என ரசிகர்கள் மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தலைமகன் தோனி:
பேட்டிங்கில் மட்டுமல்ல வரலாற்றில் இல்லாத அளவுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, கையில் எட்டாத கேட்ச்களை கூட தாவி பிடிப்பது என விக்கெட் கீப்பிங்கில் பல புதிய நுணுக்கங்களையும் யுத்திகளையும் தோனி கொண்டு வந்துள்ளார். மொத்தத்தில் தோனி வந்த பின்பு டெஸ்ட் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் என்றால் அவர் கண்டிப்பாக மிகச்சிறப்பாக அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்திய விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் – தோனிக்கு பின் என 2 வகையாக பிரிக்கலாம். அந்த அளவுக்கு இந்திய விக்கெட் கீப்பர்களின் அடிப்படை தரத்தை வானளவு உயர்த்தி விட்டு தோனி ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் ரிஷப் பண்ட் தோனியின் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். இனிவரும் காலங்களில் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர் தோனியை விட பல சாதனைகளை படைக்கக்கூடும். ஆனால் “தாய்க்கு தலைமகன் மீது எப்போதுமே சற்று பாசம் அதிகம்” என்ற கருத்தை போல இந்திய கிரிக்கெட் அன்னை பெற்றெடுத்த முதல் தரமான விக்கெட் கீப்பர் என்றால் அது எம்எஸ் தோனி என்பதில் சந்தேகமில்லை. இதற்காக ரிஷப் பண்ட் மற்றும் இதர இந்திய விக்கெட் கீப்பர்களை இங்கே தாழ்த்தி பேசவில்லை. தோனியின் தரத்தை அவரைப் பற்றி உணராத ரசிகர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவாகும். எனவே இந்திய கிரிக்கெட்டின் மிகசிறந்த விக்கெட் கீப்பராக இன்று மட்டுமல்ல என்றுமே எம்எஸ் தோனி போற்றப்படுவதற்கு தகுதியானவர்.

Advertisement