
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாளே இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது.
இதன் காரணமாக இந்த போட்டியின் மூன்றாவது நாள் அல்லது நான்காவது நாளில் நிச்சயம் முடிவு கிடைக்கும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களை மட்டுமே குவித்தது.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 181 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 4 ரன்கள் முன்னிலையுடன் தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் :
6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 145 ரன்கள் முன்னிலையுடன் நாளைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்று வரும் சிட்னி மைதானத்தில் 70 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒரு அரிதான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே இரண்டாவது முறை.. இதற்கு முன்னதாக ஒரே முறை மட்டுமே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க : 9 ரன்கள் வித்தியாசத்தில் சேவாக், கவாஸ்கர், முரளி விஜய்யின் சாதனையில் இணையும் வாய்ப்பை தவறவிட்ட – ஜெய்ஸ்வால்
அதனை தொடர்ந்து தற்போது 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி துவங்கிய இந்த போட்டியின் போது தான் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் அடித்து 200 ரன்களுக்குள் சுருண்டது. சிட்னி மைதானத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே இரண்டாவது முறை.