இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இளம் இடதுகை ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 10 அரைசதம் என 1766 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவர் அறிமுகமாகி இருந்தாலும் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தற்போது டெஸ்ட் அணியின் நிரந்தர துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.
அற்புதமான சாதனையை தவறவிட்ட ஜெய்ஸ்வால் :
இந்நிலையில் தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றில் இணையம் வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
ஆனாலும் இந்த தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்து வந்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்த தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறார்? என்ற விமர்சனம் இருந்தது.
இவ்வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதுமட்டும் இன்றி தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் வரை அவர் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 391 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் அவரது சராசரி 43.4 இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் தவறவிட்ட சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுனில் கவாஸ்கர் கவாஸ்கர்(1977-1978), வீரேந்திர சேவாக்(2003-2004), முரளி விஜய்(2014-2015) ஆகியோர் அந்த அறிமுக தொடரில் 400 ரன்களுக்கு மேல் குவித்திருந்தனர்.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் வீரரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனாஸ்ரீ விவாகரத்து – உண்மை என்ன? நடந்தது என்ன?
இவ்வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் நிச்சயம் 400 ரன்களை குவித்து அந்த சாதனையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 22 மட்டுமே அடித்த அவர் அந்த சாதனையை 9 ரன்கள் வித்தியாசத்தில் தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



