இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளிலும் 80 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 160 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மனைவியை பிரிந்தாரா யுஸ்வேந்திர சாஹல் :
கடந்த சில ஆண்டுகளாகவே புதிய வீரர்களின் வருகை காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் தற்போது அவருக்கு 34 வயதாகி விட்டதால் இனியும் அவரால் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் அவரது திருமண வாழ்க்கையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரும், நடிகையுமான தனாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்ட சாஹல் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவரை விட்டு பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் தனாஸ்ரீயின் தனிப்பட்ட நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்பதாலும் அவர் ஒரு புதிய வாழ்க்கை என்னை தேடி வரப்போகிறது என்பதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாலும் இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.
அதுமட்டும் இன்றி instagram-லும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை இருவருமே நிறுத்தி உள்ளனர். அதுமட்டும் இன்றி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இரண்டு பேருமே அழித்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கு நெருக்கமானவர்கள் பக்கம் இருந்தும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : தோனி, கோலி மாதிரி இல்லனா தட்டுல வெச்சு தரமாட்டாங்க.. பும்ராவை தவிர யாரும் ரெடியாகல.. ரோஹித் பேட்டி
அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட யுஸ்வேந்திர சாஹலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த வேளையில் தற்போது அவர் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அவரது மனைவியை விட்டு பிரிந்ததாகவும் வெளியான தகவல் நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.



