
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் அந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தற்போது இரண்டாவது டி20 போட்டியானது இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அக்டோபர் 31-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியின் முதல் 6 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 40 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை சரிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஆனாலும் ஒருபுறம் அபிஷேக் ஷர்மா நிலைத்து நின்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர். அதோடு போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் மெல்போர்ன் மைதானத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இப்படி இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் கருப்பு பட்டை அணியவும், மௌன அஞ்சலி செலுத்தவும் என்ன காரணம்? என்பது குறித்து கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கான காரணம் யாதெனில் : கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின் என்பவர் பயிற்சியின் போது பந்து தாக்கி உயிரிழந்தார்.
இதையும் படிங்க : இன்னும் 38 ரன்கள் மட்டும் தான் தேவை.. 12 ஆவது இந்திய வீரராக திலக் வர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ
அவரது மறைவிற்கு இரங்கல் செலுத்தும் விதமாகவே இப்படி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில் ஹியூக்ஸ் பந்து தாக்கி உயிரிழந்த வேளையில் தற்போது மற்றொரு இளம் வீரரும் உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.