இன்னும் 38 ரன்கள் மட்டும் தான் தேவை.. 12 ஆவது இந்திய வீரராக திலக் வர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ

Tilak Varma
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே கான்பெர்ரா நகரில் நடைபெற்ற வேளையில் மழை காரணமாக அந்த போட்டி முற்றிலுமாக நடைபெறாமல் வெற்றி தோல்வியின்றி முதலாவது போட்டி முடிவுக்கு வந்தது.

டி20 போட்டிகளில் திலக் வர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அக்டோபர் 31-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் இளம் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றிற்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 33 ஆட்டங்களில் விளையாடி 30 இன்னிங்ஸ்களில் இரண்டு சதம் மற்றும் நான்கு அரைசதம் என 962 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மேலும் அவர் 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 12-வது இந்திய வீரராக 1000 ரன்களை பூர்த்தி செய்து சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இவரே ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருந்தார்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லும், சூரியகுமார் யாதவும் இப்படி விளையாடுறது இந்திய அணிக்கு ரொம்ப நல்லது – பார்த்திவ் பட்டேல் கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்த திலக் வர்மா தற்போது இந்திய டி20 அணியிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் வெகு விரைவில் இந்திய ஒருநாள் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement