202 ரன்தான் அடிச்சாங்கன்னு கவலைப்படாதீங்க. இப்போவும் நமக்கு தான் மேட்ச் பேவரா இருக்கு – எப்படி தெரியுமா?

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி விளையாடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதன்படி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

Rahul

- Advertisement -

அதன்படி இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 63.1 ஓவரை சந்தித்த இந்திய அணியானது 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களை மட்டுமே அடித்துள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இப்படி குறைவான ரன்கள் அடித்தாலும் தற்போதும் இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் போட்டி நடைபெற்று வரும் வாண்டரர்ஸ் மைதானம் எப்போதுமே லோ ஸ்கோரிங் போட்டியாகவே அமைந்துள்ளது. அதாவது குறைந்த ரன்களை முதல் இன்னிங்சில் அடித்தாலும் அந்த அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

siraj

ஏற்கனவே இந்திய அணி கடந்த 2017-18 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது கூட இதே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் வெறும் 187 ரன்களை மட்டுமே அடித்தது ஆனாலும் அந்த போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக தற்போது அடித்துள்ள 202 ரன்கள் வெற்றிக்கு போதுமான துவக்கம் என்றே கூறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டனான முதல் போட்டியிலேயே தனித்துவமான சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – என்ன தெரியுமா?

மேலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை இந்த 202 ரன்களுக்குள் நிச்சயம் கட்டுப்படுத்துவார்கள் அந்த அளவிற்கு நமது அணியில் சிறப்பான பந்துவீச்சு இருக்கிறது. அதோடு இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அளவிற்கு நம்மிடம் சிறப்பான பந்துவீச்சு உள்ளது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement