நீயெல்லாம் கேப்டனான்னு கிண்டல் பண்ணாங்க.. 2023 சிபிஎல் கோப்பை கேப்டனா வெல்ல அஸ்வின் தான் காரணம் – இம்ரான் தாஹிர் நெகிழ்ச்சி

Imran tahir 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு கயானாவில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட கைரன் பொல்லார்ட் தலைமையிலான த்ரிபங்கோ நைட் ரைடர்ஸை இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் எதிர்கொண்டது.

ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற கயானா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய த்ரிபங்கோ அணி பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.1 ஓவரில் வெறும் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேசி கார்ட்டி 38 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அஸ்வினுக்கு நன்றி:
கயானா சார்பில் அதிகபட்சமாக ட்வயன் பிரடோரியஸ் 4 விக்கெட்டுகளும் கேப்டன் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 95 ரன்கள் துரத்திய கயானா அணிக்கு துவக்க வீரர் சாய்ம் ஆயுப் 52* (41) ரன்களும் ஷாய் ஹோப் 32* (32) ரன்களும் எடுத்து 14 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர். அதனால் இம்ரான் தாஹிர் தலைமையில் முதல் முறையாக கயானா அணி கரீபியன் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

அதை விட இத்தொடரின் துவக்கத்தில் 44 வயதாகும் தாம் கேப்டனாக செயல்பட்டதால் எங்கே கோப்பையை வெல்லப் போகிறார் என்று நிறைய பேர் கிண்டலடித்ததாக இம்ரான் தாகிர் கூறியுள்ளார். இருப்பினும் ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்த உத்வேகத்தால் தற்போது கோப்பையை வென்றுள்ளதாக நன்றி தெரிவிக்கும் அவர் இது பற்றி முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “நான் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது அனைவரும் கிண்டல்களை அனுப்பினர்”

- Advertisement -

“இருப்பினும் அதுவே எனக்கு உத்வேகத்தை கொடுத்ததால் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் எங்களுடைய அணி அனைலைஸ்ட் பிரசன்னாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில் அவர் 20 நாட்களாக எங்களுடன் வேலை செய்து முக்கிய திட்டங்களை கொடுத்தார். அதே போல இந்தியாவில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். ஏனெனில் இத்தொடரின் துவக்கத்தில் அவர் தான் எங்களால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை சொன்னார்”

இதையும் படிங்க: மெகா பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸியை சாய்த்த ஸ்ரேயாஸ் – கில் ஜோடி.. சச்சின் – லக்ஷ்மனின் 22 வருட சாதனையை தூளாக்கி புதிய வரலாறு

“மேலும் உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த அணி உரிமையாளர்களுக்கு நன்றி சொல்கிறேன். இது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருக்கும்” என்று கூறினார். அப்படி 44 வயதில் பொல்லார்ட், ரசல் காட்டடி வீரர்களை கொண்ட எதிரணியை ஃபைனலில் தோற்கடித்து கேப்டனாக கோப்பையை வென்ற அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement