தல தோனியின் ஆல் டைம் உலக சாதனையை உடைத்த இம்ரான் தாஹிர்.. இதை இனி உடைக்கிறதும் கஷ்டம் தான்

Imran Tahir 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வந்த 2023 கரீபியன் லீக் டி20 தொடர் நேற்று நிறைவு பெற்றது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய கைரன் பொல்லார்ட் தலைமையிலான த்ரிபங்கோ நைட் ரைடர்ஸ் அணியை மாபெரும் இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இம்ரான் தாகிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குறிப்பாக ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த த்ரிபங்கோ சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 18.1 ஓவரில் 94 ரன்களுக்கு சுருண்டது. பொல்லார்ட் 0, ரசல் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேசி கார்ட்டி 38 ரன்கள் எடுக்க டயானா சார்பில் அதிகபட்சமாக ட்வயன் பிரிட்டோரியஸ் பிரிட்டோரியஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தாஹிர் உலக சாதனை:
அதை துரத்திய கயானாவுக்கு சாய்ம் ஆயுப் 52* ஷாய் ஹோப் 32* ரன்கள் எடுத்து 14 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதை விட கோப்பையை வென்ற கயானா அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் போட்டியின் முடிவில் பேசியது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. அதாவது 44 வயதாகும் தாம் இதற்கு முன் எவ்விதமான கேப்டன்ஷிப் அனுபவத்தையும் கொண்டிருக்காத சூழ்நிலையில் இத்தொடரில் கயானா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அனைவரும் கிண்டலடித்ததாக அவர் கூறினார்.

இருப்பினும் அந்த கிண்டல்களை உத்வேகமாக எடுத்துக்கொண்ட தம்மால் இத்தொடரில் வெற்றி காண முடியும் என்று ஆரம்பத்திலேயே இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்ததாக இம்ரான் தாஹிர் தெரிவித்தார். இறுதியில் அந்த கிண்டல்களை பொய்யாக்கி சாதித்த அவர் அஸ்வின் மற்றும் தமக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்தது ரசிகர்களின் மனதை தொட்டது.

- Advertisement -

அப்படி 44 வயதிலும் அனைத்து வீரர்களும் சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்றுள்ள அவர் உலகிலேயே மிகவும் அதிக வயதில் ஒரு டி20 தொடரின் கோப்பையை வென்ற கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையை தகர்த்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் எம்எஸ் தோனி 41 வருடம் 325 நாட்களில் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தார்.

இதையும் படிங்க: விராட் கோலி ரிட்டயர்மென்ட் அறிவிக்க அதுதான் சரியான தருணம் – ஏ.பி.டி வில்லியர்ஸ் ஓபன்டாக்

தற்போது அவரை விட 3 வருட வித்யாசத்தில் 44 வருடங்கள் 181 நாட்களில் இத்தொடரின் கோப்பையை வென்றுள்ள இம்ரான் தாகிர் எளிதில் உடைக்க முடியாத புதிய சாதனை படைத்து சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் 41 வருடம் 271 நாட்களில் 2016 பிஎஸ்எல் தொடரை கேப்டனாக வென்று இப்பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement