விராட் கோலி ரிட்டயர்மென்ட் அறிவிக்க அதுதான் சரியான தருணம் – ஏ.பி.டி வில்லியர்ஸ் ஓபன்டாக்

ABD-Virat
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாடர்ன் டே ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் விராட் கோலி கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் தனது கரியரில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இன்றளவும் தனது உடற்தகுதியில் உலகில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துவரும் அவர் 40 வயது வரை விளையாட தகுதியானவர் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அந்த அளவிற்கு தனது பேட்டிங் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் விராட் கோலி எதிர்வரும் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரானது சரியாக இருக்கும் என அவரின் நண்பரும், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிச்சயம் அதுவே விராட் கோலி ஓய்வினை அறிவிக்க சரியான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்றால் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற வேண்டியது அவசியம். அதே போன்று ஐபிஎல்லிலும் அவர் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாட வேண்டும்.

- Advertisement -

அப்பொழுதுதான் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட முடியும். இன்றளவும் விராட் கோலி பிட்டாகத்தான் இருக்கிறார். அவரது உடற்தகுதி பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு கட்டுக்கோப்புடன் இருந்து வரும் அவருக்கு தற்போது பிசிசிஐ அவ்வப்போது ஓய்வினை வழங்கி வருவது சரியான ஒன்று. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேன் சரியான அளவில் போட்டிகளை விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : சேசிங் ரொம்ப கஷ்டம்.. 3வது ஒன்டே நடைபெறும் ராஜ்கோட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவ்வப்போது இடைவெளி இருந்தால் தான் சிறப்பாக விளையாட முடியும். விராட் கோலி எப்போதுமே கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருபவர் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவர் முக்கிய வீரராக இருப்பார். என்னை பொறுத்தவரை இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் பட்சத்தில் அந்த நேரத்தில் விராட் கோலி ஓய்வை அறிவித்தால் அது சரியான தருணமாக இருக்கும் என்று தான் கருதுவதாக ஏ.பி.டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement