IND vs AUS : சேசிங் ரொம்ப கஷ்டம்.. 3வது ஒன்டே நடைபெறும் ராஜ்கோட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Rajkot Cricket Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐசிசி 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் தலைமையில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து கடைசி போட்டியிலும் வென்று ஒய்ட்வாஷ் வெற்றியை பதிவு செய்ய இந்தியா தயாராகியுள்ளது.

அதில் முதலிரண்டு போட்டிகளில் ஓய்வெடுத்த கேப்டன் ரோகித் சர்மா,விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். அதன் காரணமாக ஆசிய கோப்பையை தொடர்ந்து மீண்டும் முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா 3வது போட்டியிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ராஜ்கோட் மைதானம்:
இதை தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சௌராஷ்ட்ராவின் ராஜ்கோட் நகரில் இருக்கும் எஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2008இல் 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் லண்டன் லார்ட்ஸ் போல தனித்துவமான பால்கனி இருப்பது ஸ்பெஷலாகும்.

இங்கு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றியும் 2 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அந்த 1 வெற்றியும் 2020இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் (170) அடித்த இந்திய வீரராக விராட் கோலி திகழ்கிறார். அதிக விக்கெட்டுகளை (3) எடுத்த இந்திய பவுலராக முகமது ஷமி இருக்கிறார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 340/6, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2020

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று சௌராஷ்டிரா நகரில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக 20% என்ற குறைவான அளவு மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தூர் போலவே ராஜ்கோட் மைதானமும் கிட்டத்தட்ட பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவிக்க இம்மைதானம் கைகொடுத்து வருகிறது. ஆனால் 2வது இன்னிங்ஸில் பிட்ச் மெதுவாக மாறி பவுலர்களுக்கு சற்று அதிக கை கொடுக்கிறது. அதனாலேயே இங்கு முதல் இன்னிங்ஸில் 312 ரன்களாக இருக்கும் சராசரி ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 290 ரன்களாக குறைகிறது.

இதையும் படிங்க: வசமாக சிக்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.. ஸ்ட்ரிக்டான 2 அபராதம் விதித்த காவல் அதிகாரி.. 2023 உ.கோ முன் இது வேறையா

அத்துடன் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 3 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளன. எனவே சேசிங் செய்வது கடினமாக பார்க்கப்படுவதால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement