கடைசி 4 ஓவரில் அவரை உலகின் எந்த பவுலராலும் அடக்க முடியாது.. அஸ்வின் வியப்பான பாராட்டு

Ravichandran Ashwin
- Advertisement -

பெங்களூருவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அந்தப் போட்டி முதலில் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோற்றது.

அந்த வகையில் ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து படைத்த அப்போட்டியில் 22/4 என இந்தியா சரிந்த போது ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார்கள். குறிப்பாக கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டான ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்து கிண்டல்களுக்கு உள்ளானார்.

- Advertisement -

கடைசி 4 ஓவரில்:
அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் நிதானமாக விளையாடிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ஆப்கானிஸ்தான் பவுலர்களை துவம்சம் செய்து சதமடித்தார். குறிப்பாக 20வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்கள் விளாசி அபாரமான ஃபினிஷிங் கொடுத்த அவர் முதல் சூப்பர் ஓவரில் 13* ரன்களும் 2வது சூப்பர் ஓவரில் 11* ரன்களும் விளாசி கடைசி வரை அவுட்டாகவில்லை. சொல்லப்போனால் அப்போட்டியில் 2 சூப்பர் ஓவரிலும் சேர்த்து ரோகித் சர்மா மட்டும் 24 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இந்நிலையில் நன்கு செட்டிலாகிவிட்டால் கடைசி 4 ஓவரில் போட்டியை அதிரடியாக ஃபினிஷிங் செய்வதிலிருந்து ரோகித்தை உலகின் எந்த பவுலராலும் கட்டுப்படுத்த முடியாது என ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளது. குறிப்பாக 16 – 20 ஓவர்களில் மிரட்டக்கூடியவராக அறியப்படும் தோனியை விட ரோகித் அபாரமாக செயல்படுவார் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அப்போட்டியில் ரோகித் சர்மா மிகவும் குறிக்கப்பட வேண்டியவராக செயல்பட்டார். இந்தியா 30/4 என தடுமாறிய போது சூழ்நிலைகளுக்கேற்றார் போல் அவர் தன்னை உட்படுத்தி செயல்பட்டார். நன்கு செட்டிலான ரோகித் சர்மாவுக்கு எதிராக கடைசி 4 ஓவரில் உலகின் எந்த பவுலராலும் சிறப்பாக பந்து வீச முடியாது என்பதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன்”

இதையும் படிங்க: கண்ணாடியை திருப்புனா மட்டும் ஆட்டோ ஓடுமா? பாகிஸ்தான் அணியை கலாய்த்து தள்ளும் – கிரிக்கெட் ரசிகர்கள்

“ஏனெனில் லென்த் பந்தை ஃபுல் அடிக்கக்கூடிய அவர் உடம்புக்கு அருகே போட்டால் பிக்-அப் ஃபுல் அடிப்பார். ஷார்ட்டாக போல நேராக பந்தை பறக்க விடக்கூடிய அவர் ஃபுல்லர் மற்றும் ஒய்டாக போட்டால் கவர்ஸ்க்கு மேல் தூக்கி அடிப்பார். யார்கரை தவறவிட்டால் கண்டிப்பாக சிக்ஸர் பறக்கும். சொல்லப்போனால் ஏற்கனவே அவர் டிம் சௌதீக்கு எதிராக (2019இல்) நமக்கு சூப்பர் ஓவரை வென்று கொடுத்தவர். உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடி இத்தொடரில் அடுத்தடுத்த டக் அவுட்டான அவர் மீண்டும் இப்போட்டியில் தன்னை பாஸ் என்பதை காண்பித்தார்” என்று கூறினார்.

Advertisement